என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
முகப்பு » ரஜினி அரசியல்
நீங்கள் தேடியது "ரஜினி அரசியல்"
ரஜினியின் அரசியல் நிலைப்பாடு மே 23-ந் தேதிக்கு பிறகு தெளிவாக தெரிய வரும் என்று ரஜினிகாந்தின் அண்ணன் சத்யநாராயணா கூறினார். #SathyanarayanaRao #Rajinikanth
திருப்பூர்:
திருப்பூரில் ரஜினி மன்ற நிர்வாகி இல்ல திருமண விழாவில் பங்கேற்க ரஜினிகாந்த் அண்ணன் சத்யநாராயணா திருப்பூர் வந்தார்.
முன்னதாக அவர் திருப்பூர் சின்னான்டி பாளையத்தில் உள்ள புகழ் பெற்ற சித்திர குப்தர் கோவிலில் சாமி தரிசனம் செய்தார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறியதாவது-
அவர் சொன்னபடியே சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிடுவார். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது.
மோடியின் நல்ல திட்டங்களை ரஜினிகாந்த் ஆதரித்தாரே தவிர அவருக்கு வாக்களிக்க கூறவில்லை. ரஜினிகாந்த் - கமல் நட்பு எப்போதும் நிலைக்கும்.
கமல்ஹாசன் அரசியலுக்கு முன் கூட்டியே வந்து விட்டார். ரஜினிகாந்த் விரைவில் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார். #SathyanarayanaRao #Rajinikanth

மே மாதம் 23-ந் தேதிக்கு பிறகு ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு தெளிவாக தெரிய வரும்.
அவர் சொன்னபடியே சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் போட்டியிடுவார். அதில் எந்த மாற்று கருத்தும் இருக்காது.
மோடியின் நல்ல திட்டங்களை ரஜினிகாந்த் ஆதரித்தாரே தவிர அவருக்கு வாக்களிக்க கூறவில்லை. ரஜினிகாந்த் - கமல் நட்பு எப்போதும் நிலைக்கும்.
கமல்ஹாசன் அரசியலுக்கு முன் கூட்டியே வந்து விட்டார். ரஜினிகாந்த் விரைவில் வருவார்.
இவ்வாறு அவர் கூறினார். #SathyanarayanaRao #Rajinikanth
ரஜினி மக்கள் மன்றத்தில் புதுக்கோட்டை, விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகளை அமைப்பு செயலாளர் இளவரசன் நீக்கியுள்ளார். #Rajinimakkalmandram
சென்னை:
ரஜினி மக்கள் மன்றத்தின் பொறுப்பாளராக வி.எம்.சுதாகரும் செயலாளராக ராஜு மகாலிங்கமும் செயல்பட்டு வருகிறார்கள். சில வாரங்களுக்கு முன்னர் டாக்டர். இளவரசன் அமைப்பு செயலாளராக நியமிக்கப்பட்டு அவர் தலைமையில் ஆலோசனை கூட்டங்கள் நடத்தப்பட்டன. முழு அதிகாரமும் இளவரசன் கைகளுக்கு சென்றது. சில மாவட்ட நிர்வாகிகள் நீக்கப்பட்டு அவர்களுக்கு பதிலாக புதிய நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.
இந்த வரிசையில் நேற்று புதுக்கோட்டை மாவட்ட செயற்குழு உறுப்பினர் பூக்கடை ரவி மற்றும் வர்த்தகர் அணி செயலாளர் ஜி.முருகானந்தம் ஆகியோரும், விழுப்புரம் மாவட்டம் நகர செயலாளர் என். கலைநேசன், இணை செயலாளர் ஆர்.மதிராஜன், துணை செயலாளர் எம்.ரஜினிமுருகன் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இதுபற்றி ரஜினி மன்ற நிர்வாகிகள் கூறும்போது, ‘நிர்வாகிகள் அடிக்கடி மாற்றப்படுவதால் ரஜினி மக்கள் மன்றத்தில் யாருக்கு எப்போது பதவி போகுமோ என்ற சூழல் உருவாகி உள்ளது. இப்போது நீக்கப்பட்டவர்கள் முன்பு நீக்கப்பட்ட மாவட்ட நிர்வாகிகளுடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று கூறி நீக்கி இருக்கிறார்கள். 20 ஆண்டுகளுக்கு மேலாக ரசிகராக இருப்பவர்களை கூட காரணம் சொல்லாமல் நீக்குகிறார்கள். காரைக்காலை சேர்ந்த மவுலா என்ற மாவட்ட செயலாளரை நீக்கினார்கள். அவர் 30 ஆண்டுகளாக பொறுப்பில் இருந்தவர். சென்னையில் அழைக்கப்பட்டிருந்த கூட்டத்துக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் அவரால் செல்ல முடியவில்லை. இதை காரணம் காட்டி நீக்கி இருக்கிறார்கள் என்று தெரிவித்தனர்.
ஏற்கனவே திருவாரூர், கடலூர், விருத்தாசலம், தேனி ஆகிய மாவட்டங்களில் உள்ள நிர்வாகிகள் மாற்றப்பட்டுள்ளனர். ரசிகர் மன்றத்தில் கடுமையாக உழைத்தவர்களுக்கு எந்த மரியாதையும் இல்லை. ரசிகர்களாக இருந்து நிர்வாகிகளாக நீண்டகாலமாகப் பணியாற்றிய எங்களைப் புரிந்துகொண்ட நிர்வாகிகளும் தலைமையில் இல்லை. வருங்காலங்களில் மாவட்டச் செயலாளருக்குத்தான் அனைத்து அதிகாரமும் கொடுக்கப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இவை எல்லாவற்றையும் பற்றி ரஜினியிடம் பேச அனுமதி கேட்டு இருக்கிறோம். இன்னும் கிடைக்கவில்லை என்று ஆத்திரத்துடன் தெரிவித்தனர்.
மேலும் கூறும்போது, ‘ரஜினி உத்தரவுபடி பூத் கமிட்டிகள் அமைக்கும் பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளோம். பிற கட்சியினர் எளிதாக பணம் கொடுத்து உறுப்பினர்களை சேர்த்து பூத் கமிட்டி அமைக்கிறார்கள். நாங்கள் அப்படி இல்லை. ஒவ்வொருவரிடமும் சென்று கெஞ்சி கேட்டு சேர்க்கிறோம். ஆனால் இப்படி திடீர் திடீர் என்று நிர்வாகிகள் நீக்கப்படுவது எங்களுக்கு சோர்வை ஏற்படுத்துகிறது. ரஜினி இதை புரிந்துகொள்ள வேண்டும்’ என்றனர்.
இது குறித்து தலைமை நிர்வாகிகளிடம் கேட்ட போது, ‘ரஜினி நிர்வாகிகள் விஷயத்தில் மிகுந்த கவனமாக இருக்கிறார். அவரது அனுமதி இன்றி யாரும் நீக்கவோ சேர்க்கவோ படவில்லை. இப்போது அமைப்பு செயலாளராக இருக்கும் டாக்டர் இளவரசன் ஒழுங்கு நடவடிக்கை கமிட்டிக்கும் தலைவராக இருக்கிறார். அவருக்கு வரும் புகார்களை விசாரித்து அதில் உண்மை இருக்கும் பட்சத்தில் மட்டும்தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. பிற கட்சியினர் மற்றும் நீக்கப்பட்டவர்களுடன் தொடர்பில் இருக்கும் நிர்வாகிகளுக்கு இடம் கிடையாது என்று ரஜினி கண்டிப்பாக கூறிவிட்டார். அதன் அடிப்படையில் தான் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. நாங்கள் திட்டமிட்ட பணிகளில் 80 சதவீதம் முடிந்துவிட்டது. விரைவில் ரஜினி கட்சி அறிவிப்பை வெளியிடுவார்’ என்று கூறினார்கள். #Rajinimakkalmandram

×

X